Thursday, August 20, 2026 7:50 pm
சிரியாவின் விமானப்படைத் தளம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதோடு, அங்கு “ஆபத்தான சாகசங்களில்” ஈடுபட வேண்டாம் என அங்காராவை எச்சரித்ததைத் தொடர்ந்து, சிரியா தனது சொந்த இராணுவத் திறன் , உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு துருக்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று பாதுகாப்பு அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்தது.
தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பில், வான்வழித் தாக்குதல்களுக்கு முன்னரோ அல்லது தாக்குதல்களின்போதோ இஸ்ரேலால் தாக்கப்பட்ட விமானப்படைத் தளத்தில் எந்தவொரு துருக்கிய இராணுவக் குழுவும் இல்லை என்று அமைச்சு கூறியது. பிராந்திய அமைதி , ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறப்படும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச சமூகம் மேலும் உறுதியான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற அங்காராவின் அழைப்பை அது மீண்டும் வலியுறுத்தியது.

