Saturday, September 12, 2026 8:31 pm
இரு நாடுகளின் எல்லைக்கு அருகே கண்டறியப்பட்ட ஆளில்லா விமானத் தளங்கள் குறித்து, ஈரான் கோரிய விசாரணைக்கு ஈராக் தலைவர் அலி ஃபாலெஹ் அல்-ஜைதி ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றிலுமாக மூடியுள்ள நிலையில், நாடு முழுவதும் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய உயிர்நாடியாக விளங்கும் சவூதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு குழாய்வழி மீது தாக்குதல் நடத்துவதற்கு ட்ரோன் தளங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அண்டை நாடான ஈராக்கில் ஈரானின் ஆதரவுடன் பல குழுக்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் சில, ஜூலை மாத இறுதியில் அமெரிக்கா,சவூதி அரேபியா ஆகியன நடத்திய கூட்டுத் தாக்குதல்களில் குறிவைக்கப்பட்டன . இப்பகுதியில் உள்ள ஈரானின் பதிலிப் படைகளில் மிகப்பெரியதும், வளைகுடா நாடுகளுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தியதுமான மக்கள் திரட்டல் படைகளை இந்தத் தாக்குதல்கள் குறிவைத்தன.
இந்தக் குழுக்கள் பெரும்பாலும் ஈரானால் ஆதரிக்கப்பட்டு, அதன் நலன்களுக்காகச் செயல்பட்டாலும், அவை ஓரளவு தன்னாட்சி பெற்றவையாகவும் உள்ளன. அமெரிக்காவின் ஆதரவுடன் ஈராக் அரசாங்கமும், இந்தக் குழுக்களின் ஆயுதங்களைக் கைவிடுமாறு செய்ய முயன்றது, ஆனால் அதில் குறைந்த அளவே வெற்றி கிடைத்தது.

