Monday, May 4, 2026 9:13 am
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் திகதி நடைபெற்றது. இதற்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆட்சியை யார் பிடிப்பார்கள் என்பதுடன் கோவையின் நிலவரத்தையும் உற்று கவனித்து வருகிறார்கள். அதிலும் கோவை தெற்கு தொகுதியின் நிலவரத்தை தமிழகமே எதிர்பார்த்துள்ளது. தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் வாக்குகள் பெற்று செந்தில் பாலாஜி முன்னிலையில் உள்ளார். கோவை தெற்கு தொகுதியில் 1,88,878 வாக்குகள் உள்ளன. கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி நடைபெற்ற வாக்குப்பதிவில் அங்கு 1,58,799 வாக்குகள் பதிவாகின. மொத்தம் 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன. திமுகவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுகவில் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜுனன், தவெகவில் செந்தில் குமார், நாம் தமிழர் கட்சியில் பேரறிவாளன் என்று மொத்தம் 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முதல்கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், செந்தில் பாலாஜி 2088 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். தவெக 2ம் இடம், அதிமுக 3ம் இடம் பெற்றுள்ளது.

