Monday, May 4, 2026 9:23 am
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தொகுதியில் அதிமுக சார்பாக சந்தான கிருஷ்ணனும், தவெக சார்பாக விஎஸ் பாபுவும் போட்டியிட்டனர். இதில் திமுக சார்பாக களத்தில் உள்ள மு.க.ஸ்டாலின் மற்ற வேட்பாளர்களை விட அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். அடுத்த இடத்தில் தவெக வேட்பாளர் விஎஸ் பாபுவும், 3ஆம் இடத்தில் அதிமுக வேட்பாளர் சந்தாக கிருஷ்ணனும் உள்ளனர்.

