Saturday, August 8, 2026 12:45 pm
கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட “பல” விளையாட்டு வீரர்கள் காணாமல் போனதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உகாண்டாவின் குத்துச்சண்டை அணியைச் சேர்ந்த நான்கு வீரர்கள் ஸ்கொட்லாந்தில் காணாமல் போனதாகவும், செவ்வாயன்று உகாண்டாவுக்குத் திரும்புவதற்கு முன்பு அவர்கள் மற்ற குழுவினருடன் மீண்டும் இணையவில்லை என்றும் உகாண்டாவின் விளையாட்டுச் செய்தி இணையதளமான NBS Sport தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ஒரு குத்துச்சண்டை வீரர் காணாமல் போனதாக பாகிஸ்தான் டுடே செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
“பல விளையாட்டு வீரர்கள் காணாமல் போனதாக ஸ்கொட்லாந்து பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. சூழ்நிலைகளை மதிப்பிடுவதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன, மேலும் உள்துறை அமைச்சுடன் ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன,” என்று ஸ்கொட்லாந்து பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
2018 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற போட்டிகள் மற்றும் 2014ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற போட்டிகள் உட்பட, முந்தைய கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் தஞ்சம் கோரிய பல வழக்குகள் பதிவாகியுள்ளன.
“74 நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 3,000 விளையாட்டு வீரர்களை நாங்கள் இந்த நகரத்திற்கு வரவேற்றுள்ளோம். பாதுகாப்பான , பத்திரமான போட்டிகளை வழங்க நாங்கள் விரும்புகிறோம். எனவே, அனைவரும் விதிமுறைகளுக்கு இணங்க வந்து செல்வதை உறுதி செய்வதற்காக, ஸ்கொட்லாந்து பொலிஸார் , எல்லைப் பாதுகாப்புப் படை , இங்கிலாந்து விஸாக்கள் மற்றும் குடிவரவுத் துறையுடன் நாங்கள் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றுகிறோம்,” என்று போட்டிகளின் தலைமை நிர்வாகி ஃபில் கூறினார்.

