Sunday, July 19, 2026 4:01 pm
ஈரான் மீதான தனது தொடர்ச்சியான எட்டாவது இரவுத் தாக்குதல்களை முடித்துக்கொண்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தாக்குதல்களின் ஒரு பகுதியாக, ஜோர்தானிய இராணுவத் தளம் ஒன்றில் வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் குறைந்தது இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றும், அந்தத் தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் ஈரானிய புரட்சிகர காவலர் படைகளை அமெரிக்கா குறிவைத்தது என்றும் சென்ட்காம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
“ஈரானிய இராணுவத் திறன்களைத் தொடர்ந்து சீர்குலைக்கும் நோக்கில், அமெரிக்கா ஈரானிய இராணுவத்தின் கடலோரக் கண்காணிப்பு ,வான் பாதுகாப்பு வசதிகள், கடல்சார் திறன்கள், மற்றும் ஏவுகணை, ஆளில்லா விமான சேமிப்புத் தளங்கள் ஆகியவற்றை வெற்றிகரமாகத் தாக்கியுள்ளது,” என்று சென்ட்காம் கூறியது.

