Monday, July 20, 2026 1:59 pm
விறுவிறுப்புடனும் பல எதிர்பாராத திருப்பங்களுடனும் நடைபெற்ற 2026 பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. சம்பியனை வென்றெடுக்கும் குறிக்கோளுடன் ஆர்ஜன்டீனா அணியும் ஸ்பெய்ன் அணியும் மோதிக்கொண்டன.
இன்று(20) அதிகாலை நியூ ஜேர்சி விளையாட்டரங்கில் ஆரம்பமான 2026 பிபா உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் வெற்றிவாகை சூடியது. 2010-ல் தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் 16 ஆண்டுகளில் தனது இரண்டாவது பிபா உலகக் கிணத்தை வென்று அதிரடி காட்டியுள்ளது.
போட்டியின் ஆரம்பத்திலிருந்தே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் இருந்தது.
93 வது நிமிடத்தின் போது ஆர்ஜெண்டினா வீரர் என்சோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால் அந்த அணி மீதி ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலதிக நேரத்தின் போது ஸ்பெயின் வீரர் பெர்ரான் டோரஸ் அபாரமான கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார். ஆர்ஜென்டினா கடுமையாக போராடிய போதிலும் இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின் 23-வது பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் சேம்பியன் பட்டத்தை வென்றது.
போட்டியின் முடிவில் ஆர்ஜென்டினா அணி தோல்வியைத் தழுவியதும் அணியின் தலைவரும் கால்பந்து ஜாம்பவானுமான லியோனல் மெஸ்ஸி மைதானத்தில் மனமுடைந்து கண்ணீர் விட்ட காணொளி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தவிர 2026 உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கேலியன் எம்பாப்பே வரலாற்றுச் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
தொடர்ச்சியாக இரண்டு முறை உலகக் கிண்ண தங்கப் பாதணியை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை எம்பாப்பே பெற்றுள்ளார். 2026 கால்பந்தாட்ட தொடரின் 8 ஆட்டங்களில் 10 கோல்களை அடித்து எம்பாப்பே முதல் இடத்தைப் பிடித்தார். கடந்த 2022 கட்டார் உலகக் கிண்ணத்திலும் 8 கோல்கள் அடித்து எம்பாப்பே தங்கப் பாதணியை வெற்றிகொண்டார்.
உலகக் கிண்ண வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 22 கோல்களை அடித்துள்ள எம்பாப்பே 21 கோல்கள் அடித்த லியனல் மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி உலகக் கிண்ண தொடரில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இடம்பிடித்துள்ளார்.

