Saturday, July 4, 2026 9:45 pm
250 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நகரமான பிலடெல்பியாவில் , ஜூலை நான்காம் திகதி நிகழ்வுகளுக்கான கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின.
பெஞ்சமின் ஃபிராங்க்ளின் பார்க்வேயில் நடைபெறும் ‘ ஒன் பில்லி: அமெரிக்காவிற்கான ஒற்றுமை இசை நிகழ்ச்சி’ முக்கிய அம்சங்களில் ஒன்றாகும் . இந்த நிகழ்ச்சி மாலை 5 மணிக்குத் தொடங்கி, அதைத் தொடர்ந்து நள்ளிரவில் வாணவேடிக்கை நடைபெறும்.
கிறிஸ்டினா அகுலேரா, ஜில் ஸ்காட் ,தி ரூட்ஸ் ஆகியோர் முக்கியக் கலைஞர்களாக இடம்பெறுகின்றனர். இவர்கள் வில் ஸ்மித், டிஜே ஜாஸி ஜெஃப், மீக் மில் மற்றும் பிற கலைஞர்களை மேடைக்கு அழைத்து வர உள்ளனர் . வாண்டா சைக்ஸ் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்த நகரத்தில் மாலை 5 மணிக்கு உலகக் கிண்ணப் போட்டியும் நடைபெறுகிறது.
பிலடெல்பியா பகுதி, ஜெர்சி ஷோர் , டெலாவேர் ஆகிய இடங்களில் உள்ள பல சமூகங்கள் விடுமுறைக்கால நிகழ்வுகளும், வாணவேடிக்கைகளும் நடைபெற்றும்.
கடும் வெப்பம் காரணமாக, வெள்ளிக்கிழமை அன்று பிலடெல்பியாவில் நடைபெறவிருந்த சுதந்திர தின அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டது .
அ

