Wednesday, June 17, 2026 7:01 am
அமெரிக்கா,ஈரான் நாடுகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முறையான கையொப்பத்திற்கு முன்னதாக, ஈரானிய துறைமுகங்கள் , கப்பல்கள் ஆகியவற்றின் மீதான இரண்டு மாத கால அமெரிக்க கடற்படை முற்றுகை விலக்கிக்கொள்ளப்பட்டதாக துணை வெளியுறவு அமைச்சர் மஜித் தக்த்-ரவஞ்சி கூறினார்.
ஜனாதிபதி ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், “அமெரிக்க கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்க” உத்தரவிட்டதாகக் கூறினார். ஆனால், அமெரிக்க இராணுவத்தையும் உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு கடற்படை நடவடிக்கையான கூட்டு கடல்சார் தகவல் மையம் , போர்நிறுத்தம் “செயல்படுத்தப்படும் வரை” வெள்ளிக்கிழமை வரை முற்றுகை நீடிக்கும் என்று திங்களன்று தெரிவித்தது.

