Tuesday, April 28, 2026 9:09 pm
ரஷ்யக் கோடீஸ்வரர் அலெக்ஸி மொர்தாஷோவின் ‘நார்ட்’ என்ற கப்பல், அமெரிக்க மற்றும் ஈரானிய அனுமதியுடன் முற்றுகையிடப்பட்ட நீர்வழியைக் கடக்க முடிந்ததாகக் கூறப்படுகிறது.
துபாயில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஈரான் ,அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஆட்சேபிக்காததால், முற்றுகையிடப்பட்டிருந்த ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்ல முடிந்தது என்று மொர்தாஷோவுக்கு நெருக்கமான ஓர் வட்டாரம் செவ்வாயன்று தெரிவித்தது.
பெப்ரவரி மாதம் முதல் போக்குவரத்து கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள, அமெரிக்க-ஈரான் மோதலின் மையப்பகுதியில் அமைந்துள்ள வணிக முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதையில், 500 மில்லியன்டொலருக்கும் (370 மில்லியன் பவுண்) அதிகமான மதிப்புள்ள பல அடுக்கு உல்லாசக் கப்பல் சனிக்கிழமையன்று பயணிக்க எவ்வாறு அனுமதி பெற்றது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ரஷ்யக் கொடியின் கீழ் பயணித்த, ‘நார்ட்’ என்று அழைக்கப்படும் அந்தப் படகு, சர்வதேச கடல்சார் சட்டத்திற்கு இணங்க, அங்கீகரிக்கப்பட்ட பாதையில் ஜலசந்தியைக் கடந்தது என அந்த வட்டாரம் தெரிவித்தது.

