Monday, May 4, 2026 11:00 am
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் திமுகவைச் சேர்ந்த 31 அமைச்சர்களும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.ஸ்டாலின், உதயநிதியும் பின்னடைவு
அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக முதலமைச்சரும் கொளத்தூர் திமுக வேட்பாளருமான ஸ்டாலின், தன் தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அதேபோல, துணை முதலமைச்சரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி திமுக வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் பின்னிலையில் உள்ளார்.
அமைச்சர்கள் ரகுபதி, சிவசங்கர், ஐ.பெரியசாமி ஆகியோர் மட்டும் முன்னிலையில் உள்ளனர். அதேபோல முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜியும் களத்தில் முன்னணியில் உள்ளார். திமுகவில் அமைச்சர்களே பின்னடைவைச் சந்தித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காலை 10 மணியைப் பொறுத்தவரை தவெக 98 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக கூட்டணி 80 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

