Friday, November 20, 2026 2:18 pm
சீனத்தலைவர் ஷி ஜின் பிங்கை ,அமெரிக்க ஜனாதிபதி சந்தித்தது வரலாற்று அவமானம் எனவும் புட்டின், ஷி ஜின்பிங் ஆகியோரின் “கைக்குள் டிரம்ப் இருக்கிறார்” என்றுவியாழக்கிழமை செனட் அவையில் உரையாற்றிய செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர், தெரிவித்தார். கூறினார்.
அதேவேளை”ஷீ ,புட்டின் ஆகியோருடனான முத்தரப்பு சந்திப்பை ‘வரலாற்றுச் சிறப்புமிக்கது’ என்று ட்ரம்ப் அழைக்கிறார். ஆம், இது மக்கள் நீண்ட காலம் நினைவில் வைத்திருக்கும் ஒரு வரலாற்று அவமானம்,” என்று ஷூமர் கூறினார்.
“புகைப்பட வாய்ப்புக்காக நமது எதிரிகளுக்கு அடிபணிவதை விட வேறு எதையும் விரும்பாத ஒரு ஜனாதிபதியால், இது அமெரிக்காவிற்கு இழைக்கப்பட்ட துரோகம்,” என்று அவர் மேலும் கூறினார்.
“சீனாவிடமிருந்தோ அல்லது ரஷ்யாவிடமிருந்தோ ஒரு நொடி கூட நீடிக்கக்கூடிய அர்த்தமுள்ள எந்தவொரு வாக்குறுதியையும் பெறத் தவறியதற்காக” ட்ரம்ப்பை செனட்டர் ஷூமர் விமர்சித்தார்.
“சர்வதேச ஒழுங்கில் அமெரிக்காவின் நிலையை விட, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு விருந்தில் தனது இருக்கையில் அமர்வதைப் பற்றியே ட்ரம்ப் அதிகம் கவலைப்படுகிறார்,” என்று ஷூமர் கூறினார்.

