Friday, November 20, 2026 2:08 pm
கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையில், புனித தந்தத் திருத்தாது வீற்றிருக்கும் அறையின் மேல் அமைந்துள்ள பொன் விதானம் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை திறந்து வைக்கப்பட்டது.
2025-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த புனரமைப்புப் பணி, தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேலாவின் தலைமையிலும், தாய்லாந்தின் ‘வாட் மார்ப் ஜான்’ (Wat Marp Jan) மடாலயத்தின் ஆதரவுடனும், 24 காட் தங்கத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது.
இந்த பொன் விதானம், 1987-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாசாவால் ஆலயத்திற்கு வழங்கப்பட்டது. இது இதற்கு முன்பாக 2002 , 2018 ஆகிய ஆண்டுகளிலும் புனரமைக்கப்பட்டது.

