Monday, November 2, 2026 10:14 pm
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட பலர் மீது தொடரப்பட்ட வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை [2] விசாரணைக்கு வந்தபோது டிசம்பர் 7-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டு கொழும்பு, தும்முல்லையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு அருகில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பானதாகும் இந்த வழக்கு.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த இளவரசர் செயித் அல் ஹுசைன் இலங்கை வந்திருந்த வேளையில், நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும், வீதிகள் மறிக்கப்பட்டன என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதே இந்த வழக்கிற்கான பின்னணியாகும்.
தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள், இன்று (2) நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

