Monday, November 2, 2026 10:02 pm
மெல்போர்னிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றின் சரக்கு அறையில் புகை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை [1] இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
UL 605 என்ற அந்த விமானம், இரவு சுமார் 10.38 மணியளவில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. அதில் பயணித்த 258 பயணிகளும் , 15 பணியாளர்களும் பத்திரமாகத் தரை இறங்கினர்.
சரக்கு அறையில் இருந்த இறைச்சிப் பொருட்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்ட உலர் பனிக்கட்டியால் புகை ஏற்பட்டது என, அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெருநிறுவனத் தகவல் தொடர்புத் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

