Monday, November 2, 2026 10:21 pm
‘லிட்ரோ காஸ் சிலிண்டர்கள் கையிருப்பில் இருந்தும், அவற்றை விற்பனை செய்ய மறுத்த வர்த்தகர் ஒருவருக்கு கண்டி நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது கண்டெடுக்கப்பட்ட, தலா 12.5 கிலோ எடையுள்ள 28 ‘லிட்ரோ காஸ்’ சிலிண்டர்களை அரசுடமையாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வர்த்தகர், கண்டியில் அங்கீகரிக்கப்பட்ட ‘லிட்ரோ கேஸ்’ விற்பனை நிலையத்தை நடத்தி வந்தார். அந்த விற்பனை நிலையத்தில் எரிவாயு விற்பனை செய்ய மறுப்பதாக நுகர்வோரிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, அக்டோபர் 29 ஆம் திகதி இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையின் போது, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரி ஒருவர் வாடிக்கையாளர் போலச் சென்று, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் ஒன்றைக் கோரினார். ஆனால், சிலிண்டர்கள் எதுவும் கையிருப்பில் இல்லை என்று அந்த வர்த்தகர் கூறினார்.இருப்பினும், அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 28 ‘லிட்ரோ சிலிண்டர்கள் கண்டெடுக்கப்பட்டன.இதையடுத்து, அந்தச் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வர்த்தகருக்கு எதிராக கண்டி நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.நீதிமன்ற விசாரணையின் முடிவில், அந்த வர்த்தகருக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், பறிமுதல் செய்யப்பட்ட 28 சிலிண்டர்களையும் அரசுடமையாக்க உத்தரவிடப்பட்டது.

