Thursday, November 5, 2026 6:54 pm
வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) சான்றிதழ்களைக் கட்டாயமாகச் சமர்ப்பிக்கும் காலக்கெடுவை, உள்நாட்டு வருவாய்த் துறை 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.
கடந்த நவம்பர் 1 ஆம் திகதி அமுலுக்கு வரவிருந்த இந்தக் கட்டுப்பாடு, குறிப்பிட்ட பரிவர்த்தனைகளில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் பொதுமக்களிடையே TIN சான்றிதழ்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்ததைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் ஒப்புதலுடன் அமுலாக்கத்தை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக, அத்துறை ஒரு பொது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
நீட்டிக்கப்பட்ட இந்தக் காலகட்டத்தில், ஏற்கனவே TIN-க்காகப் பதிவு செய்துள்ள தனிநபர்கள் தங்கள் சான்றிதழ்களைப் பெறுவதற்கு, மாற்று மற்றும் மிகவும் வசதியான வழிமுறைகளை அறிமுகப்படுத்தத் துறை திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், இதுவரை TIN பெறாதவர்கள், துறையின் இணையவழி மின்-சேவைகள் தளம் மூலம் பதிவு செய்யுமாறு ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.

