Wednesday, November 25, 2026 9:38 pm
ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து மத்தளக்கு வந்த ‘அஸூர் ஏர்’ (Azur Air) விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த விமானத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதன் காரணமாக உஸ்பெகிஸ்தானிலிருந்து வரவிருந்த மற்றொரு விமானம் கட்டுநாயக்கவிற்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொஸ்கோவிலிருந்து மத்தளக்கு வந்த ‘அஸூர் ஏர்’ விமானம் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

