Friday, November 27, 2026 9:59 pm
மத்திய கிழக்கில் நடைபெறும் போர் காரணமாக அடுத்த ஆறு மாதங்களில் 16 நாடுகளில் பசி மேலும் மோசமடையும் என்றும், போரினால் பாதிக்கப்பட்ட சூடான், ஏமன் உள்ளிட்ட ஐந்து நாடுகள் மிகக் கடுமையான அபாயத்தை எதிர்கொள்கின்றன என்றும் ஐக்கிய நாடுகளின் உணவு நிறுவனம் வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மோதல்கள், மத்திய கிழக்கில் போர் காரணமாக உயர்ந்து வரும் எரிபொருள் விலைகள் , உதவிகளில் செய்யப்பட்ட கடுமையான வெட்டுக்கள் ஆகியவற்றை அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
சூடான், ஏமன், தெற்கு சூடான், சோமாலியா ,வடக்கு நைஜீரியா ஆகியவை மிக மோசமாகப் பாதிக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் உணவு நிறுவன நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஐந்து நாடுகளும் 2022 முதல் இந்தப் பட்டியலில் மீண்டும் மீண்டும் இடம்பெற்றுள்ளன. காஸாவில் ஒக்டோபர் 2025 போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து பாலஸ்தீனியப் பகுதிகள் ஒரு படி கீழே இறக்கப்பட்டன; இருப்பினும், காஸாவின் 67% மக்கள் இன்னும் நெருக்கடி நிலை பசி அல்லது அதைவிட மோசமான நிலையை எதிர்கொள்கின்றனர், மேலும் இந்த முன்னேற்றங்கள் நிலையற்றவை என்றும் அந்த அறிக்கை எச்சரித்தது.

