Friday, November 27, 2026 9:40 pm
கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய குறச்சாட்டில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது.அதெல்லாம் வதந்தி என தவெக அமைச்சர்கள் கூறிய நிலையில் நீதிமன்றத்தின் தலையீட்டுக்கு பின்னர், கலெக்டரிடம் இருந்து நவ. 23ம் திகதி புகார் பெறப்பட்டது.
பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அதன்பிறகு அருள் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை அதிகாரிகளாக ஐபிஎஸ் அதிகாரிகள் காமினி, சிருஷ்டி சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து சிருஷ்டி சிங், பல்வேறு தரப்பினரிடம் விசாரணையை தொடங்கினார்.
நடந்த சம்பவம் தொடர்பாக, பெண் கலெக்டர் மாவட்ட நீதிபதியிடம் வாக்குமூலமும் அளித்து இருந்தார். அருள் விக்னேஷ் மீதான புகார் குறித்து சாட்சிகளிடம் அடுத்தடுத்து விசாரணையும் நடத்தப்பட்டது. இதையடுத்து, அவரின் கைது நடவடிக்கை எப்போது என்ற கேள்விகள் எழுந்தன.
இந் நிலையில், கள்ளக்குறிச்சியில் உள்ள அருள் விக்னேஷ் வீட்டுக்கு விசாரணை அதிகாரியான சிருஷ்டி சிங் நேரில் சென்றார். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்.
அதன் முடிவில், அருள் விக்னேஷை பெண் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பொலிஸார் இன்று கைது செய்தனர்.

