Thursday, November 26, 2026 6:11 pm
பூமியை தவிர மற்ற கிரகங்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்கிற ஆராய்ச்சி பல வருடங்களாக பல நாடுகளும் செய்து வருகின்றன. அதில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியும் என்கிற நம்பிக்கை விஞ்ஞானிகளுக்கு இருப்பதால் எனவே அங்கு மனிதர்களை குடியேற்றும் முயற்சியில் பல நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.
செவ்வாய் உட்பட மற்ற கிரகங்களிலும் மனிதர் வாழக்கூடிய அடிப்படை வசதிகள் குறிப்பாக ஒட்சிஜன், கார்பன் டை ஒக்சைடு,நீர் ஆகியவை இருக்கிறதா என பல வருடங்களாகவே ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான், சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ள புதன் கோளில் பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பது தொடர்பாக Bepicolombo விண்கலம் ஆய்வு செய்யவிருக்கிறது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனமும்(ESA), ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமும் (JAXA) இணைந்து 2018ம் வருடம் இந்த விண்கலத்தை விண்ணில் ஏவின.
2012ம் வருடம் நாஸாவின் MESSENGER விண்கலம், புதன் கோளின் துருவப் பள்ளங்களில் பனிக்கட்டி இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்தது. இதுபற்றிய விரிவான ஆய்வுகளை BepiColombo விண்கலம் 2027ம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் மேற்கொள்ளவிருக்கிறது.

