Sunday, August 16, 2026 6:26 am
ஈரானின் உள் விவகாரங்களில் “சட்டவிரோதத் தலையீடு” செய்வதற்கு எதிராக பிரெஞ்சு அரசாங்கத்தை ஈரானிய உளவுத்துறை அமைச்சு சனிக்கிழமை எச்சரித்தது.
தனது இணையதளத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், “வெளிநாட்டு ஊடுருவல் ,தலையீடு சம்பந்தப்பட்ட ஒரு பெரிய வழக்கில்” சந்தேக நபர்களுடன் இரண்டு பிரெஞ்சு தூதர்கள் ஜூலை மாதம் தெஹ்ரானில் ஒரு இரகசியக் கூட்டத்தில் பங்கேற்றதாகவும் , விசாரணையைத் தொடர்ந்து, அந்தத் தூதர்கள் “ஈரானின் உள்நாட்டுச் சட்டம் மற்றும் அவர்களின் தூதரகக் கடமைகளுக்கு முரணான மீறல்கள் மற்றும் நடத்தைகளின் விரிவான பதிவுகளைக்” கொண்டிருந்தது எனவும் ஈரானில் உள்ள வெளிநாட்டுத் தூதர்கள் “சட்டவிரோதத் தலையீட்டு” நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவேளை ஜூலை 20 ஆம் திகதி , தெஹ்ரானில் இரண்டு பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் கூறினார்.
ஒரு அறிக்கையில், அவர் இந்தச் சம்பவத்தை “அதிர்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டதோடு, இது “விளைவுகள் இல்லாமல் போகாது” என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியை எச்சரித்ததாகவும் கூறினார்.

