Wednesday, November 25, 2026 9:55 pm
இயந்திர அறையில் ஏற்பட்ட பாதிப்பினால் இயங்க முடியாமல் போன சரக்குக் கப்பல் ஒன்றுக்கு அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் (HIP) அடைக்கலம் அளித்துள்ளது. தற்போது அக்கப்பல் பழுதுபார்ப்புப் பணிகளுக்காகத் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
சைப்ரஸ் நாட்டுக் கொடியை ஏந்திய எம்.வி. ஏ.ஏ.எல். ஜிப்ரால்டர் என்ற பொது சரக்குக் கப்பல், செயலிழந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர், எஸ்.பி.எம். அர்ஜுன் என்ற மீட்பு இழுவைப் படகு மூலம் இலங்கைக்கு இழுத்துச் செல்லப்பட்டது. அது புறப்படும் திகதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
சுமார் 23,000 தொன் சரக்குகளை ஏற்றிச் செல்வதாகக் கூறப்படும் 159.99 மீற்ற நீளமுள்ள இந்தக் கப்பல், தற்போது பழுதுபார்க்கும் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு, அதன் உள்ளூர் முகவரான செய்லைன் மாரிடைம் சர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட், தேவையான பழுதுபார்ப்புப் பணிகளை ஒருங்கிணைக்கும்.
வணிகக் கப்பல் போக்குவரத்துத் தலைமை இயக்குநரின் ஆட்சேபனையின்மை மற்றும் துறைமுக அதிகாரி, கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் (MEPA) பரிந்துரைகளைத் தொடர்ந்து, செயலிழந்த கப்பலை அதன் நங்கூரமிடும் இடத்திலிருந்து கப்பல்துறைக்கு நகர்த்துவதற்கு SPM அர்ஜுனுக்கு உதவுவதற்காக, HIP நிறுவனம் வருணா, வாசபா, ராவணா , பாண்டுக்கபாயா ஆகிய நான்கு இழுவைக் கப்பல்களைப் பணியில் ஈடுபடுத்தியது.
கப்பல் துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பு, அது கடலில் இருந்தபோதே, HIP மூன்று கடலோர உதவி நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்தது.

