Monday, September 21, 2026 4:55 pm
இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் மழைக்கால நிலைமை நீடிப்பதால், அடுத்த 36 மணிநேரத்திற்கு பல பகுதிகளில் சுமார் 100 மி.மீ வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல், சபரகமுவ, மத்திய ,வடமேல் மாகாணங்களிலும், காலி , மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடமத்திய மாகாணம்,மன்னார் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்; அதேவேளை ஊவா, மட்டக்களப்பு , அம்பாறை ஆகிய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பல பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளது. பலத்த காற்று, மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

