Saturday, April 18, 2026 5:25 pm
இந்திய நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட 131-வது அரசியல் சாசன திருத்த மசோதா, போதிய பெரும்பான்மை இல்லாததால் லோக்சபாவில் தோல்வியடைந்தது. இதையடுத்து தொகுதி மறுவரையறை மசோதா வாபஸ் பெறப்பட்டது.
மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களுக்கும் ஆதரவாக 298 உறுப்பினர்களும், எதிராக 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இந்த மசோதாக்கள் வெற்றி பெற மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் ஆதரவாக தேவை. அந்த வகையில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற 326 வாக்குகள் தேவை. அது கிடைக்காத காரணத்தால், மூன்று மசோதாக்களும் தோல்வி அடைந்தன.

