Friday, November 27, 2026 9:48 pm
துருக்கியின் எர்சுரும் நகரில் தனது புதிய கௌரவ தூதராக தொழிலதிபர் எலிஃப் யூசெலிக்கை இலங்கை நியமித்துள்ளது. இதன் மூலம், அந்நாட்டில் இந்தப் பதவிக்கு முதன் முதலில் ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
துருக்கிக்கான இலங்கைத் தூதர் நிலுகா கடுருகமுவ, நவம்பர் 26 ஆம் திகதி அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் யுசெலிக்கிற்கான நியமன ஆணைக்குழுவை வழங்கினார் என, நவம்பர் 27 ஆம் திகதிதூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூசெலிக், கிழக்கு அனடோலியப் பிராந்தியத்தை உள்ளடக்கிய தூதரக அதிகார வரம்புடன், 2026 அக்டோபர் 22 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் மூன்றாண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

