Monday, June 29, 2026 12:30 pm
முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பெரம்பூர் தொகுதியை தனக்கு வைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் ராஜினாமா செய்து விட்டார். இதுபோக மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய சட்டசபை தொகுதிகளும் காலியாக இருக்கிறன.
ஏனெனில் அந்த தொகுதி அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை இராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து விட்டனர். இந்த 6 தொகுதிகளிலும் விரைவில் இடைத்தேர்தலில் நடத்தும் பணியில் தேர்தல் ஆணையம் இறங்கியிருக்கிறது. இந்நிலையில் இந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என்பதில் தவெகவில் பெரிய போட்டி நிலவி வருகிறது.
‘எங்கள் எம்.எல்.ஏ பதவியை இராஜினாமா செய்திருக்கிறோம்.. எனவே அதே தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட எங்களுக்கு சீட் கொடுக்க வேண்டும்’ என அந்த அவர்கள் கேட்கிறார்கள்.
ஒருபக்கம் தவெக நிர்வாகிகள் ‘சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு சீட் கொடுக்கவில்லை.. இடைத்தேர்தலில் சீட் கொடுக்க வேண்டும்’ என்று கேட்கிறார்கள்.
ஒருபக்கம் அதிமுக உள்ளிட்ட சில கட்சிகளிலிருந்து தவெகவில் இணைந்துள்ள பலரும் எங்களுக்கு அந்த இடைத்தேர்தலில் சீட் கொடுக்க வேண்டும் எனவும் கேட்கிறார்களாம்
, எனவே யாருக்கு சீட் கொடுப்பது என்பதில் தவெகவில் குழப்பம் நீடித்த வருவதாக சொல்லப்படுகிறது.

