Thursday, May 21, 2026 5:16 pm
நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான்.
இன்று பெண் குழந்தைக்கு தந்தையாக மாறியிருக்கிறார் சீமான். ஏற்கனவே அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். சீமான் பல வருடங்களுக்கு முன்பு கயல்விழி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் நிலையில் அவரின் ஆதரவாளர்களும், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் சீமானுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

