Friday, November 20, 2026 2:04 pm
ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தசநாயக்க,அவரது தனிப்பட்ட செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை நவம்பர் 27-ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனிப்பட்ட செயலாளரின் பிணை விண்ணப்பம் குறித்த தீர்ப்பை அதே திகதியில் வழங்குமாறும் கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம் உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் நான்காவது சந்தேகநபரான தினேஷ் பெரேராவைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

