Friday, May 15, 2026 4:03 pm
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாகத் தமிழ்நாடு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட ஆறு மாத காலத்திற்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். தற்போது தமிழ்நாடு அரசிதழில் இந்தத் தகவல் முறைப்படி வெளியிடப்பட்டுள்ளதால், இந்தியத் தேர்தல் ஆணையம் விரைவில் இதற்கான தேர்தல் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றான திருச்சி கிழக்கில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் தங்களது பலத்தைப் நிரூபிக்க இப்போதே தயாராகி வருகின்றன. தொகுதியின் தற்போதைய நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
இதற்கிடையில், தேர்தல் ஆணையம் பிற மாநிலங்களில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களுடன் சேர்த்து திருச்சி கிழக்கு தொகுதிக்கான திகதியையும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

