Monday, May 4, 2026 5:27 pm
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அதிமுக , பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தமிழகம் முழுவதும் வீசி வரும் “விஜய் அலை”, அரசியல் களத்தின் மூத்த தலைவர்களையும் கோட்டைகளையும் தகர்த்து எறிந்துள்ளது.
முக்கியமாக, அதிமுகவின் பலமான முகமாக கருதப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராயபுரம் தொகுதியில் படுதோல்வியை சந்தித்ததுடன் கட்டுப்பணத்தையும் இழந்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவர்களான எல். முருகன் அவினாசி தொகுதியிலும், தமிழிசை சவுந்தரராஜன் மயிலாப்பூர் தொகுதியிலும் பின்னடைவை சந்தித்து வருவது அக்கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தனது அறிமுக தேர்தலிலேயே அதிமுக, பாஜக போன்ற கட்சிகளின் முக்கியத் தலைவர்களைப் பின்னுக்குத் தள்ளி, சுமார் 38 சதவீத வாக்குகளை அறுவடை செய்திருப்பது ஒரு வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
மக்களின் இந்த தீர்ப்பு, பழைய அரசியல் பாணிகளை நிராகரித்துவிட்டு, விஜய்யின் புதிய தலைமையை முழுமனதாக ஏற்றுக் கொண்டுள்ளதையே பறைசாற்றுகிறது.

