Monday, November 2, 2026 10:33 pm
வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பெறுவதற்காக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு பெருமளவிலான மக்கள் சென்றதால், அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பேச்சாளர் நந்தன குமார, பொதுமக்கள் திணைக்கள அலுவலகங்களுக்கு நேரில் வருவதற்குப் பதிலாக, இணையவழி (online) முறையைப் பயன்படுத்தித் தங்கள் TIN எண்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
நெரிசலைக் குறைப்பதற்காக, மிக அவசியமான தேவை இருந்தால் ஒழிய, பொதுமக்கள் பிராந்திய அலுவலகங்களுக்கு நேரில் செல்வதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

