Tuesday, August 4, 2026 7:01 am
நாட்டின் வடமேற்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைகள் “பிராந்தியத்திற்கு அப்பாற்பட்ட எதிரிகள் அல்லது பயங்கரவாதக் குழுக்களிடமிருந்து” வரும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் தீர்க்கமான பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் மூத்த தளபதி ஒருவர், கூறியதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின்தரைப்படைகளின் தளபதி முகமது கராமி, ஹம்ஸே சையத் அல்-ஷோஹாதா தலைமையகத்தின் கீழ் உள்ள போராளிகள், வெளிநாட்டு எதிரிகள் அல்லது பயங்கரவாத அமைப்புகளின் எந்தவொரு “தவறான கணிப்பிற்கும்” எதிராக உயர் எச்சரிக்கை நிலையில் இருப்பதாகக் கூறினார்.
X தளத்தில் ஒரு பதிவில், கராமி, உளவுத் திறன்கள், செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் ஆதரவுடன், படைகள் “தீர்க்கமான பதிலடி” கொடுக்க முழுமையாகத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

