Saturday, September 19, 2026 8:02 am
சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்ட ஒரு ஆட்சேபனைக்குரிய கருத்துக்காக, இலங்கை நாட்டைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவின் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இத்தகவல் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய சப்ரி, மரண தண்டனை குறித்த செய்தியை இலங்கை வெளியுறவு அமைச்சு இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும், அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ தீர்ப்புக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்ட ஒரு ஆட்சேபனைக்குரிய கருத்துக்காக ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பது மிக அதிகம். அத்தகைய செயலுக்காக மரண தண்டனை விதிப்பது “மிகவும் பொருத்தமற்றது, மனிதாபிமானமற்றது,ஏற்றுக்கொள்ள முடியாதது.”சிவராசா அந்தப் பதிவை சில நிமிடங்களிலேயே நீக்கிவிட்டு, காணொளி மூலம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்ததாக வெளியான தகவல்கள் தீவிர கவனத்திற்குரியவை என்று சப்ரி குறிப்பிட்டார்.
அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ தீர்ப்பு வரும் வரை, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல் இலங்கை அதிகாரிகளால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

