Tuesday, August 4, 2026 6:54 am
கட்டாரின் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, பிராந்திய நிலவரங்கள் மற்றும் பதற்றங்களைக் குறைப்பதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்க, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், ஓமான் , பஹ்ரைன் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் தனித்தனியாக தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று கட்டார் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
கட்டார் வெளியுறவு அமைசு வெளியிட்ட அறிக்கையின்படி, அமைச்சர்கள் இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்ததுடன், பதற்றங்களைத் தணிப்பதற்கும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் இராஜதந்திர முயற்சிகள் கூட்டு ஒருங்கிணைப்பு குறித்தும் விவாதித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

