Saturday, September 19, 2026 9:15 pm
உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்று வரும் 46வது சதுரங்க ஒலிம்பியாட் தொடரில், இஸ்ரேலுக்கு எதிரான தனது தொடக்க ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணித்தது.
இஸ்ரேல் மீதான பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கை , பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான நிலைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வாக்ஓவர் காரணமாக இஸ்ரேலுக்கு 4-0 என்ற கணக்கில் வெற்றி கிடைத்தது.
சி.எஃப்.பி தலைவர் சையத் ஜீஷான் நக்வி, ‘இஸ்ரேல் தொடர்பாக பாகிஸ்தானுக்குத் தெளிவான மற்றும் நிலையான கொள்கை உள்ளது என்றும், அரசாங்கத்தின் கொள்கைக்கு முரணான ஒரு போட்டியில் கூட்டமைப்பால் பங்கேற்க முடியாது’ என்றும் கூறியதாக டைம்ஸ் ஆஃப் கராச்சி செய்தி வெளியிட்டுள்ளது.
“பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாங்கள் போட்டியைப் புறக்கணித்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பாகிஸ்தானின் பங்கேற்பு தொடரும் என்றும், ஆனால் இஸ்ரேல் குறித்த பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை கூட்டமைப்பு மதிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

