Monday, April 13, 2026 6:45 am
பண்டிகைக் காலத்தில் அனுமதியின்றி இயங்கும் பஸ்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, அனுமதியின்றி இயங்கிய ஏழு பஸ்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு சனிக்கிழமை (11) பஸ்தியன் மாவத்த பஸ்கள் முனையத்தில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
மக்கள் பூங்காவிலிருந்து ஹற்றன், நாவலப்பிட்டிய , தயாகம ஆகிய இடங்களுக்கு அனுமதி இல்லாமல் இயக்கப்பட்ட பஸ்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக போக்குவரத்து ஆணைக்குழு பணிப்பாளர் ஷெரீன் அதுகொரல தெரிவித்தார்.
சரியான அனுமதிகள் இன்றி பஸ்கள் இயக்கப்பட்டதாகவும், அங்கீகரிக்கப்பட்ட கட்டணங்களை விட அதிகமாக வசூலித்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

