Sunday, June 21, 2026 5:17 pm
அரசு அதிகாரிகள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இது, மக்கள் தொகை அளவிலான பரந்த கட்டுப்பாடுகளுக்கு முன்னோடியாக அமையக்கூடும் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர் .
தலிபான்களின் இராணுவ நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டு, கார்டியன் பத்திரிகையால் ஆய்வு செய்யப்பட்ட ஓர் உத்தரவின்படி, இந்த வாரம் முதல் அமுலுக்கு வரவிருந்த அந்தத் தடை, “உயர் பதவியில் இருப்பவர்கள், கீழ் பதவியில் இருப்பவர்கள், பொது முஜாஹிதீன்கள் அல்லது இராணுவப் பணியாளர்கள்” கைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்கிறது.
இணையத்தில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், தலிபான் அதிகாரி ஒருவர் தனது கைப்பேசியில் இருந்து தடை உத்தரவைப் படிப்பது போலவும், மற்றொருவர் கைப்பேசிகளை உடைப்பது போலவும் காணப்படுகிறார்.
அந்த உத்தரவில், “யாரேனும் இதைப் பயன்படுத்தினால், அவர்களின் கைபேசி உடைக்கப்படும், மேலும் மீறுபவருக்கு சட்ட, ஷரியா தண்டனை விதிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், எந்தவொரு விலக்குக்கும் தலிபான் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதாவிடமிருந்து எழுத்துப்பூர்வமான ஆணை தேவைப்படும் என்றும் அது குறிப்பிடுகிறது.

