Tuesday, June 30, 2026 8:48 pm
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் முதலமைச்சரின் விஜய்க்கு நண்பரான ராகவா லாரன்ஸ் தவெவில் இணைந்து திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.
மேலும், தற்போது அரசியலுக்கு வரும் எண்ணம் வந்திருப்பதாகவும், விரைவில் தனது முடிவை சொல்வதாகவும், நான் அரசியலுக்கு வருவது பற்றி உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் எனவும் கோரிக்கை வைத்து சில நாட்களுக்கு முன்பு ராகவா லாரன்ஸ் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
ஆனால் அதன்பின் ராகவா லாரன்ஸிடமிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில்தான், இன்று ஒரு வீடியோவை வெளியிட்ட ராகவா லாரன்ஸ் ‘திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டிடும் எண்ணம் எனக்கு இல்லை. நான் அதற்காக அரசியலுக்கு வர விரும்பவில்லை. இத்தனை வருடங்களாக உழைத்து, சேர்த்து வைத்திருக்கும் நல்ல பெயரை ஒருவரிடம் என்னால் சரண்டர் செய்ய முடியாது. ஆனால், நான் அரசியலுக்கு வரவில்லை என்று சொல்லவில்லை’ என கூறியிருந்தார்.
இதற்கு பின்னணியில் ஒரு கதை சொல்லப்படுகிறது. ராகவா லாரன்ஸ் கட்சியில் சேர்க்க ஆதவ் அர்ஜுனா எதிர்ப்பு தெரிவித்துக்காக தகவல் கசிந்திருக்கிறது. தேர்தலுக்கு முன்னரே கட்சிக்கு வந்த பலருக்கும் முன்னுரிமை கொடுப்போம் எனவும் லாரன்ஸ் போன்றவர்கள் கட்சியில் இணைந்தால் சினிமா கட்சி என்கிற இமேஜ் உருவாகும் என்றும், மற்றொரு திராவிட கட்சியாக தவெகவை அடையாளப்படுத்துவதே நமக்கு முக்கியம் என ஆதவ் அர்ஜுனா சொன்னதை தவெக தலைமை கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால்தான் ராகவா லாரன்ஸ் இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் என சொல்கிறார்கள்.

