Thursday, April 23, 2026 9:15 am
தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் , முதல் ஆளாக நடிகர் அஜித் குமார் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக துபாயில் இருந்த அஜித் நேற்று ஜனநாய கடமையை நிறைவேற்றுவதற்காக விமானத்தின் மூலம் சென்னை வந்தார். இதையடுத்து இன்று காலை வெள்ளை நிற கோட் சூட்டில் திருவான்மியூர் வாக்குச்சாவடிக்குயில் வாக்களித்தார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 15 நிமிடங்களே இருந்த நிலையில் அங்கு வந்த அஜித் சரியாக 6.55 மணிக்கு அதாவது தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே தனது வாக்கினை செலுத்தினார். இதன் மூலம் தமிழகத்தில் முதல் ஆளாக அஜித் வாக்களித்துள்ளார். இவரை பார்ப்பதற்காக அவரின் ரசிகர்கள் காலை 6 மணி முதலே இங்கு கூடியிருந்ததால் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் அஜித் தனது வாக்கினை செலுத்தினார்.

