Tuesday, June 30, 2026 8:58 pm
லாகூரின் கஹ்னா பகுதியில் பயிற்சி மையத்தின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 குழந்தைகள் உயிரிழந்தனர், ஐந்து பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து 19 குழந்தைகள் கஹ்னா தாலுகா தலைமையக (THQ) மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டதாக பஞ்சாப் சுகாதார அமைச்சர் குவாஜா இம்ரான் நசீர் கூறினார். இடிபாட்டில் 14 குழந்தைகள் உயிரிழந்ததை அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
முதற்கட்ட மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு இரண்டு குழந்தைகள் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டனர், மற்ற நான்கு பேர் மருத்துவமனையில் உள்ளனர்,” என்று அவர் கூறினார். மேலும், அந்த நான்கு பேரும் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கூரை இடிந்து விழுந்தபோது பயிற்சி மையத்திற்குள் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்ததாக மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் கட்டிடத்தின் மேல் தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகவும், தரைத்தளத்தில் குழந்தைகள் வகுப்புகளில் கலந்துகொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

