Tuesday, June 30, 2026 9:12 pm
ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீது “போக்குவரத்துக் கட்டணங்களை” விதிப்பதை மஸ்கட் ஆதரிக்கவில்லை என்று ஓமானின் வெளியுறவு அமைச்சர் சையித் பத்ர் பின் ஹமத் அல் புசைதி கூறினார். அதே நேரத்தில், சில கடல்சார், சுற்றுச்சூழல் ,வழிசெலுத்தல் தொடர்பான சேவைகளுக்கான கட்டணங்கள் பரிசீலிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரெஞ்சு வானொலி நிலையமான மான்டே கார்லோ டூவாலியாவிற்கு அளித்த பேட்டியில் பத்ர் பின் ஹமத் அல்புசைதி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். அதன் சில பகுதிகள் அவரது அலுவலகத்தால் X தளத்தில் பகிரப்பட்டுள்ளன.
சேவை தொடர்பான கட்டணங்கள் குறித்து, பயனடையும் நாடுகள் ,நிறுவனங்களுடன் தாமாக முன்வந்து விவாதிக்கப்படலாம் என்று அல்புசைதி கூறினார். வழிசெலுத்தல் பாதுகாப்பை மேம்படுத்துதல், நீர்நிலைகளை மாசுபாட்டிலிருந்து பாதுகாத்தல் மற்றும் விபத்துகள் அல்லது அவசரநிலைகளுக்கான தயார்நிலையை வலுப்படுத்துதல் ஆகியவை அத்தகைய சேவைகளில் அடங்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
