Friday, November 6, 2026 5:49 pm
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ‘கிரிஷ்’ (Krrish) பரிவர்த்தனை வழக்கு தொடர்பான நடவடிக்கைகள் நிமித்தம் இன்று வெள்ளிக்கிழமை [6] கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
‘கிரிஷ்’ பரிவர்த்தனை வழக்கில் அவருக்கு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டிருந்த போதிலும், ‘ஏர்பஸ்’ (Airbus) லஞ்ச வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவின் பேரில் அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

