Monday, November 2, 2026 10:40 pm
பலத்த மழை , நீர்மட்டம் உயர்ந்து வருவதன் காரணமாக, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் தலா ஒரு அடி உயரத்திற்குத் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் விளைவாக, வினாடிக்கு 2,800 கன அடி என்ற வீதத்தில் தெதுரு ஓயா ஆற்றுக்குள் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர்த்தேக்கத்திற்கு கீழ் பகுதியில், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் நீர்மட்டத்தில் மாற்றம் ஏற்படக்கூடும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வான்கதவுகள் திறக்கப்படுவது குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் ,பேரிடர் முகாமைத்துவ அதிகாரிகள் அவ்வப்போது வெளியிடும் அறிவிப்புகளைக் கூர்ந்து கவனிக்குமாறும் அந்தத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
நீர்மட்டத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

