Thursday, May 14, 2026 2:23 pm
‘நட்புறவின் பாலங்களைக்’ கட்டும் இந்தியக் கடற்படையின் முயற்சியின் தொடர்ச்சியாக, 16 நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுக் குழுவினருடன் ஐஓஎஸ் சாகர் என்ற பெயரில் இயங்கும் இந்தியக் கடற்படைக் கப்பலான சுனய்னா, மே 15 ஆம் திகதி கொழும்புக்கு வரவுள்ளது.
பங்களாதேஷ், இந்தோனேசியா, கென்யா, மலேசியா, மாலத்தீவுகள், மொரிஷியஸ், மொசாம்பிக், மியான்மர், சிங்கப்பூர், சீஷெல்ஸ், தென்னாப்பிரிக்கா, இலங்கை, தான்சானியா, தாய்லாந்து, திமோர் லெஸ்டே , ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மாலுமிகள் ஆகியோரைக் கொண்ட பன்னாட்டுக் குழுவினருக்கான ஒருங்கிணைந்த துறைமுகப் பயிற்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஐஓஎஸ் சாகர் கப்பல் ஏப்ரல் 02 ஆம் திகதி மும்பையிலிருந்து புறப்பட்டது.

