Friday, August 14, 2026 3:39 pm
கொலம்பியாவில் திங்களன்று ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 273 ஆக உயர்ந்துள்ளது என்று தேசிய பேரிடர் இடர் மேலாண்மைப் பிரிவின் இயக்குநர் டேவிட் தமாயோ வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்த நில நடுக்கத்தால் 40,753 குடும்பங்களைச் சேர்ந்த 97,515 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 273 பார் பலியானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
250 உடல்கள் சட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு 227 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன மற்றும் 189 உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் 3,824 பேர் காயமடைந்தனர். 377 பேரைக் காணவில்லை.
12,584 வீடுகள் முற்றிலுமாக அழிந்துள்ளன. 74,873 வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த நிலநடுக்கத்தால் 172 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், 2,198 பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், 825 சமூக மையங்கள், 216 சுகாதார மையங்கள் மற்றும் ஐந்து விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களைக் கண்காணிக்க, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தையும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களையும் கொலம்பியா பயன்படுத்தி வருகிறது.
தரை மட்டத்தில், இடிபாடுகளுக்கு அடியில் காணாமல் போனவர்களைக் கண்டறிய, தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் மீட்பு நாய்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.
திங்கட்கிழமை நிலநடுக்கத்தின் மையமாக இருந்த, வடமேற்கு மாகாணமான சோகோவில் உள்ள சான் ஹோசே டெல் பால்மரில், வியாழக்கிழமை காலை 9:42 மணிக்கு (உள்ளூர் நேரம்) 4.2 ரிக்டர் அளவிலான புதிய நில அதிர்வு பதிவானதாக கொலம்பிய புவியியல் சேவை தெரிவித்துள்ளது.

