Tuesday, June 30, 2026 8:51 pm
சிவகங்கையில் குப்பைகளை கொட்டக் கூடாது என ஒருவர் வைத்த போர்ட் தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிவகங்கை இளையான்குடி பாரதியார் தெருவில் ‘இங்கு குப்பைகளை கொட்ட கூடாது. மீறினால் செய்வினை செய்யப்படும்; என்கிற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருக்கிறது.
இது நகராட்சி சார்பில் வைத்திருக்க வாய்ப்பில்லை.. எனவே தனி நபர்தான் இதை வைத்திருக்க வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள்.. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் அந்த நபர் அப்படி அங்கு எச்சரிக்கை பலகை வைத்தும் பலரும் அதை பொறுப்படுத்தாமல் அந்த இடத்தில் குப்பையை வீசி செல்கிறார்கள்.

