Wednesday, October 28, 2026 5:02 pm
ஒரு நாள் , சாதாரண சேவை ஆகிய இரு பிரிவுகளின் கீழும் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்காக மண்டல அலுவலகங்களுக்கு வரும் விண்ணப்பதாரர்கள், நாளை வியாழக்கிழமை (29) முதல் இணையவழியில் சந்திப்பு முன்பதிவு செய்ய வேண்டும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட சேவைகளுக்கு விண்ணப்பிப்பதற்காக மண்டல அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இணையவழியில் ஒரு திகதி,நேரம் என்பனவற்றை முன்பதிவு செய்ய வேண்டும்.
திணைக்களம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ‘மண்டல அலுவலகங்களிலிருந்து கடவுச்சீட்டு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஒரு திகதியையும் , நேரத்தையும் முன்பதிவு செய்யுங்கள்’ என்ற தலைப்பிலான இணைப்பு மூலம் இந்தச் செயல்முறையை எளிதாக்கியுள்ளது.
பத்தரமுல்லவில் உள்ள திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் சேவைகள் வழக்கம் போல் தொடரும் என்று அதன் ஊடகப் பேச்சாளர் மகேஷ் கருணாதாச தெரிவித்தார்.

