Friday, May 1, 2026 8:16 pm
அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தானிடம், ஈரான் ஒரு புதிய முன்மொழிவை வழங்கியுள்ளது என்று அதிகாரப்பூர்வ ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டது.
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஈரான் தனது சமீபத்திய பேச்சுவார்த்தை முன்மொழிவை வியாழக்கிழமை இரவு பாகிஸ்தானிடம் சமர்ப்பித்ததாக அந்த அறிக்கை தெரிவித்தது.
வியாழக்கிழமை இரவு அரசு நடத்தும் ஐஆர்ஐபி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் வெளியுறவு அமைச்சுச் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதும், நீடித்த அமைதியை ஏற்படுத்துவதும் தெஹ்ரானின் முன்னுரிமைகள் என்று கூறினார்.
போரிடும் தரப்பினரிடையே ஏப்ரல் 8 ஆம் திகதி போர் நிறுத்தம் எட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 11 , 12 ஆகிய திகதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் முடிவடைந்தன.

