Thursday, May 14, 2026 4:26 pm
பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவு தோட்டப் பகுதியில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை 12.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
தோட்ட தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த போது தேயிலை மரத்தில் அடியில் இருந்த குளவி கூடு கலைந்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

